இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் இடையே நீண்ட நாட்களாக காதல் இருந்து வந்தது. கடந்த ஆண்டு இவர்களுக்குத் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், திடீரென அது நின்றது.

மந்தனாவின் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் திருமணம் தள்ளிப்போனதாக ஒருபுறம் சொல்லப்பட்டாலும், பலாஷ் மீது எழுந்த சில புகார்களால் தான் இவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இருவரும் சமூக வலைதளங்களில் ஒருவரையொருவர் பின்தொடர்வதையும் நிறுத்திவிட்டனர்.

இந்நிலையில், தற்போது ஸ்மிருதி மற்றும் பலாஷ் குடும்பத்தினர் ஒரு பொது நிகழ்ச்சியில் ஒன்றாகச் சந்தித்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஸ்மிருதியின் தந்தை, பலாஷின் சகோதரியுடன் மிகவும் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கிறார்.

இதைப் பார்த்த ரசிகர்கள், இருவருக்கும் இடையே இருந்த கசப்பான சம்பவங்கள் மறைந்து மீண்டும் சமாதானம் ஆகிவிட்டதாகக் கருதுகின்றனர். இதனால் பாதியில் நின்ற இவர்களது திருமணம் மீண்டும் விரைவில் நடக்கும் என்று சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.