ஜோதிகா  காதலுக்கு மரியாதை பட ஹிந்தி ரீமேக்கான ‘டோலி சஜா கே ரக்னா’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் தென்னிந்திய மொழி படங்களில் மட்டுமே நடித்துவருகிறார். தற்போது நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து காதல் என்ற மலையாள படத்தில் ஜோதிகா நடித்திருக்கிறார். இந்நிலையில் காதல் என்பது பொதுவுடமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

இப்படம் இரு பெண்களின் இடையேயான காதலை பேசும் படமாக உள்ளது. இப்படத்தின் போஸ்டரை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ள நடிகை ஜோதிகா, “காதல் என்பது 2 பாலினம் சார்ந்தது அல்ல, அது 2 இதயம் சார்ந்தது” என்று தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ஜெய்பீம் படத்தில் நடித்த லிஜோமோல் நடித்துள்ளார்.