இன்றைய இளைஞர்கள் மத்தியில் டாட்டூ (Tattoo) குத்திக்கொள்வது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. பொதுவாக கைகளிலோ அல்லது முதுகிலோ டாட்டூ குத்துவதை நாம் பார்த்திருப்போம்.
ஆனால், இந்த இளைஞரோ ஒரு படி மேலே போய், தனது காதலி மீதான காதலை நிரூபிக்க, தனது முகத்திலேயே (கன்னத்தில்) காதலியின் பெயரை டாட்டூவாகக் குத்தியுள்ளார்.
छपरी ❌
छपरी प्रो मैक्स ✅ये छपरी समाज के लोग इस तरह की हरकतें करके आशिक समाज में तगड़ा कंपटीशन ला रहे हैं, इनको समय रहते रोकने की जरूरत है। 😂 pic.twitter.com/TdUc7XaiE1
— Shashank Patel (@RccShashank1) January 7, 2026
டாட்டூ ஸ்டுடியோவில் அமர்ந்து, தனது கன்னத்தில் இருக்கும் காதலியின் பெயரை கேமராவில் காட்டி அந்த இளைஞர் பெருமிதம் கொள்ளும் வீடியோ, ‘X’ (ட்விட்டர்) தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
13 நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இவருக்கு ‘சப்ரி ப்ரோ மேக்ஸ்’ (Chapri Pro Max) விருது கொடுக்கலாம்”, “ஒருவேளை பிரேக்-அப் ஆகிவிட்டால், முகத்தை எங்கே கொண்டு போய் மறைப்பார்?” என வறுத்தெடுத்து வருகின்றனர்.
இன்னும் சிலர், “காதல் என்ற பெயரில் இது போன்ற முட்டாள்தனமான செயல்களைச் செய்து சமூகத்தைச் சீரழிக்காதீர்கள்” என ஆவேசமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
