காதலுக்கு கண்ணில்லை என்று தான் சொல்வார்கள் ஆனால் வயது கூட இல்லை என்று சில ஜோடிகள் நிரூபித்து வருகிறார்கள். தமிழ் கலாச்சாரத்தின் மீது வெளிநாட்டினவருக்கு அதிக அளவில் ஈர்ப்பு என்பது இருக்கிறது. இதன் காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்து தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்கிறார்கள். சமீபத்தில் கூட வெளிநாட்டில் இருந்து வந்து ஒரு ஜோடி தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு வெளிநாட்டு நபர்களை காதலித்து தமிழகத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் திருமணம் செய்து கொண்ட சம்பவங்கள் கூட அரங்கேறி இருக்கிறது.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை கோவிலில் வெளிநாட்டு தம்பதி தற்போது திருமணம் செய்து கொண்டது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 69 வயது நபரை ஆப்பிரிக்காவை சேர்ந்த 60 வயது பெண் காதலித்து வந்த நிலையில் இருவரும் தற்போது திருமணம் செய்துள்ளனர். மேலும் அவர்கள் தமிழ் கலாச்சாரத்தின் மீதுள்ள பற்றின் காரணமாக இந்துமுறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விருப்பப்பட்டு தற்போது தமிழ்நாட்டிற்கு வந்து திருமணம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
