விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் ஆடு மேய்க்கும் முருகன் என்ற 45 வயது நபரை அடித்துக் கொலை செய்து விட்டு உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது நேற்று முன்தினம் காலை ஒரு சாக்கு மூட்டை விவசாய நிலத்தில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற போது வெட்டு காயங்களுடன் ஒரு சடலத்தை மூட்டையில் கட்டி வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர்.

அதாவது முருகனை அவருடைய மகன் தவமணி என்பவர் தான் அடித்துக் கொலை செய்துள்ளார். அதாவது தவமணி ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் அவருடைய காதலுக்கு முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு ஆடுகளையும்  விற்பனை செய்ததால் கோபத்தில் கொன்றதாக கூறியுள்ளார். இந்த கொடூர கொலைக்கு அபூபக்கர் என்பவரும் உடந்தையாக இருந்த நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.