பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலியின் 26-வது பிறந்தநாளை முன்னிட்டு 26 கிலோமீட்டர் தூரம் ஓடி, தனது அன்பை வெளிப்படுத்திய வினோதச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காதலியின் விசேஷ நாளை மறக்க முடியாத ஒன்றாக உள்ளது. இடைவிடாமல் 26 கி.மீ தூரத்தை ஓடிக் கடந்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்தச் செய்தி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. “நிஜமான அன்பு கடினமான உழைப்பைக் கோரும்” என்று ஒரு தரப்பினர் பாராட்டினாலும், சிலர் இதை ஒரு வேடிக்கையான முயற்சியாகக் கருதி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
மேலும் எது எப்படியோ, காதலியின் பிறந்தநாளுக்காகத் தனது உடல் வலிமையைப் பணயம் வைத்து இந்த இளைஞர் செய்த செயல், இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
