உத்தரபிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தில் மே 22-ம் தேதி வியாழக்கிழமை நடைபெற்ற ஓர் அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பரவி வருகிறது. அதாவது சிவில் லைன்ஸ் பகுதியிலுள்ள ஜவாஹர் பூங்காவில் ஒரு ஆண் நபர், பெண் ஒருவருடன் அசிங்கமான நடத்தை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர் ஒரு பெண் போலவே புர்கா அணிந்து வந்திருந்தார்.

இந்த சம்பவம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. அவர்களில் ஒருவர், சந்தேகத்துடன் அந்த நபரிடம் நேரடியாக சென்று அவரை விசாரிக்கத் தொடங்கினார். அவரை எதிர்கொண்டதும் அந்த நபரின் செயல்கள் காணொளியாக ஒரு செல்போனில் பதிவு செய்யப்பட்டன. அதில், அவர் புர்கா அணிந்த நபருடன் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்பதும், “புர்காவை கழட்டுங்கள்” என கூறுவதும் தெளிவாகக் காணப்படுகிறது.

சற்றே தயங்கிய பிறகு, அந்த நபர் புர்காவை கழைத்தார். அப்போது தான் அவர் ஒரு ஆண் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

மேலும் அந்த நபர் ஒரு பெண் போல வேடம் தன்னுடைய பெண் தோழியுடன் அதாவது காதலி என்று கூறப்படும் நிலையில் அந்த பெண்ணுடன் முகம் சுளிக்கும் வகையில் நடந்ததாக கூறப்படுகிறது.  மேலும் ஒரு ஆணும் பெண்ணும் இப்படி பொது இடத்தில் நடந்து கொண்டது மிகவும் தவறு என பலரும் வீடியோவை பார்த்துவிட்டு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.