பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷாருக்கான் அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடுவார். அப்போது ரசிகர் ஒருவர் ஷாருக்கானிடம் உங்கள் மனைவிக்கு காதலர் தினத்தில் நீங்கள் கொடுத்த சிறப்பான பரிசு எது என்று கேட்க பிளாஸ்டிக் தோடு தான் என்று ஷாருக்கான் கூறியுள்ளார். 34 வருடங்களுக்கு முன்பாக அந்த பரிசை கௌரிக்கானுக்கு ஷாருக்கான் கொடுத்துள்ளார்.

நடிகர் ஷாருக்கான் 6 வருடங்களாக கௌரியை காதலித்து வந்த நிலையில் கடந்த 1991-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு ஆரியன் கான், சுகானா மற்றும் ஆப்ராம் கான் என்ற 3 பிள்ளைகள் இருக்கிறது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் ஆரம்ப காலத்தில் சினிமாவில் நடிப்பதற்கு போராடிய போது கௌரி தான் தனக்கு பக்க துணையாக இருந்துள்ளார் என பல சமயங்களில் கூறி இருக்கிறார். மேலும் ஷாருக்கான் தன்னுடைய மனைவிக்கு பிளாஸ்டிக் கம்மலை பரிசாக கொடுத்திருந்தாலும் கௌரிகான் அந்த கம்மலை இன்றும் பத்திரமாக வைத்திருப்பார் என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.