தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் மலையாளத்தில் நடிகர் திலீப்புடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வரும் நிலையில், தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தமன்னா பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக அடிக்கடி தகவல்கள் வெளிவரும் நிலையில் புத்தாண்டு தினத்தில் இருவரும் கோவாவில் ஒன்றாக இருந்த வீடியோவும் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் விஜய் வர்மா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இருவரின் கால்கள் மட்டும் தெரியும்படி ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஒன்று விஜய் வர்மாவின் கால் மற்றொன்று நடிகை தமன்னாவின் கால் என்று கூறி வருகிறார்கள். மேலும் இதிலிருந்து விஜய் வர்மா மற்றும் தமன்னா காதலிப்பது உறுதியாக விட்டது என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் இது தொடர்பாக தமன்னா மற்றும் விஜய் வர்மா தரப்பிலிருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.