ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், தனது காதலனுடன் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இருவரும் ஒரு இடத்தில நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது மூன்று மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்து தகராறு செய்தனர். பின்னர், அந்த மூவரும் காதலனை அடித்து தாக்கி, இளம்பெண்ணிடம் இருந்து நகை மற்றும் பணத்தைப் பறித்து, அவரை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இந்த கொடூர சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பெண்ணும் காதலனும், உறவினர்களிடம் நடந்தவற்றை கூறி, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். நேற்று, சிப்காட் பகுதியில் மூன்று வாலிபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தபோது, அவர்களே இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.