ஈரான் மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒரு அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து விமானி ஒருவர் ஈரானுக்குள் குதித்துவிட்டதாக அந்நாட்டு உள்ளூர் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த விமானியை உயிருடன் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு விலையுயர்ந்த பரிசு வழங்கப்படும் என்றும் அந்தச் செய்தியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையோ அல்லது பென்டகனோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இருப்பினும், காணாமல் போன விமானிகளைத் தேடும் பணியில் அமெரிக்க ராணுவம் தீவிரமாக இறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்துப் பேசிய இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர், அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே மீட்புப் பணிகள் தொடங்கிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு விமானி ஏற்கனவே மீட்கப்பட்டுவிட்டதாகவும், மற்றொருவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.