சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு திடுக்கிடும் வீடியோவில், நதிக்கரையில் தண்ணீர் குடிக்கச் சென்ற ஒரு யானையின் தும்பிக்கையை ஆக்ரோஷமான முதலை ஒன்று திடீரென கவ்விப் பிடித்தது. நீருக்கடியில் பதுங்கியிருந்த அந்த முதலை, உலகின் மிகப்பெரிய நிலவாழ் விலங்கான யானையையே நிலைகுலையச் செய்யும் நோக்கில் அதன் தும்பிக்கையைத் தனது வலிமையான தாடைகளால் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டது.  இந்த எதிர்பாராத தாக்குதலால் அதிர்ச்சியடைந்த யானை, முதலையின் பிடியிலிருந்து விடுபட தனது தும்பிக்கையை பலமாக அங்குமிங்கும் உதறி நீண்ட நேரம் போராடியது.

மேலும் யானை மற்றும் முதலையின் இந்த அரிய உயிர் போராட்டத்தைக் காட்டும் அந்த வீடியோ பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. சுமார் 15 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ, எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட சில நாட்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகியுள்ளது.

“>

இந்நிலையில் காட்டின் வலிமையான இரண்டு உயிரினங்களுக்கு இடையேயான இந்த மோதல், இயற்கையின் விசித்திரமான மற்றும் ஆபத்தான பக்கத்தை வெளிப்படுத்துவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்த வீடியோவின் தத்ரூபமான தன்மை காரணமாக, இது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகத்தையும் ஒரு தரப்பினர் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.