உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், அங்கிருந்த தம்பதியினரை மிக மோசமாகத் திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “நான் ஒரு போலீஸ், உன் முகத்திலேயே சிறுநீர் கழிப்பேன்” என்று அவர் ஆக்ரோஷமாக மிரட்டும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
मैडम दरोगा है, सुनिए कैसे धमका रही है…पीड़ित युवक सफाई दे रहा है. लेकिन मैडम सुनने को तैयार नहीं हैं.
देखिये, एक महिला सब-इंस्पेक्टर कैसे वर्दी का धौंस दिखा रही है. वीडियो यूपी के मेरठ की है. pic.twitter.com/xFbhlOI7nZ
— Priya singh (@priyarajputlive) December 29, 2025
அலிகார் மாவட்டத்தில் பணியாற்றும் ரத்னா ரதி என்று அடையாளம் காணப்பட்டுள்ள அந்த அதிகாரி, போக்குவரத்து நெரிசலில் தனது கார் சிக்கிய ஆத்திரத்தில், முன்னால் நின்ற வாகன ஓட்டிகளிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த அநாகரிகமான நடத்தை குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
