சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, டெல்லியில் உள்ள ஒரு வியாபாரியின் மனிதாபிமானத்தை உலகிற்கு காட்டியுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுலா வந்த ஒரு வெளிநாட்டு பெண்மணி, இந்த நடைபாதை கடைக்குச் சென்று உணவு அருந்துகிறார். உணவின் சுவையை ரசித்த அவர், அதற்கான பணத்தைக் கொடுக்க முற்படும்போது, அந்த வியாபாரி பணத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறார்.
இந்நிலையில் “நீங்கள் எங்கள் நாட்டு விருந்தினர்” என்ற உயரிய நோக்கத்தில் அவர் காட்டிய அந்த அன்பு, அந்தப் பெண்ணை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வீடியோவைப் பார்க்கும் எவருக்கும் அந்த வியாபாரியின் பெரிய மனமும், விருந்தோம்பல் பண்பும் வியப்பை ஏற்படுத்துகிறது.
यही तो असली हिंदुस्तान है जहाँ मेहमान को पैसे से नहीं दिल से खिलाया जाता है
इंसानियत और अपनापन ही हमारी सबसे बड़ी पहचान है ❤️ pic.twitter.com/wj9mSNmWyB— Zoya Khan (@Zoyakhan7025) February 8, 2026
“>
மேலும் மிகக் குறைந்த வருமானத்தில் பிழைப்பு நடத்தினாலும், ஒரு வெளிநாட்டுப் பயணியிடம் காட்டிய இந்த தாராள குணம் விருந்தினரே தெய்வம் என்ற இந்தியப் பண்பாட்டை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் லட்சக்கணக்கான இதயங்களை வென்றுள்ளதுடன், பலருக்கும் அன்றைய பொழுதை இனிமையாக்கும் ஒரு நேர்மறைச் செய்தியாக மாறியுள்ளது.
