டிக் டாக் ரீல்ஸ் மூலம் பிரபலமானவர் இலக்கியா. இவர் மீது சமீபத்தில்   பண மோசடி செய்ததாக புகார் எழுந்து வந்தது. இந்த நிலையில், இது குறித்து டிக் டாக் ரீல்ஸ் பிரபலம் இலக்கியா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். “காசு கொடுத்தா ப்ளூ டிக் தராங்க..” “அது என்னுடைய X பக்கம் இல்லை..” என்று கூறி இலக்கியா வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் இதே போல 5 வருடங்களுக்கு முன்பும் பண மோசடி பிரச்சனையில் சிக்கியதாக கூறினார். இதனை தொடர்ந்து அவர் சைபர் கிரைம் போலீசாரிடம் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார் என்று கூறியுள்ளார்.