நடிகை எமி ஜாக்சனின் புதிய கெட்டப்பை சமூகவலைதளங்களில் சிலர் கிண்டல் அடித்திருந்தனர். இதற்கு பதலளித்துள்ள எமி ஜாக்சன், Oppenheimer நடிகர் சிலியன் மர்பி உடன் என்னை ஒப்பிடுவது மகிழ்ச்சியளிக்கிறது. எனது புதிய படத்திற்காகவே இத்தோற்றம் இதற்கு இந்தியாவில் இருந்து பெருமளவில் விமர்சனம் கிளம்புவது வருத்தமளிக்கிறது.

ஒரு நடிகர், படத்திற்காக தனது தோற்றத்தை மாற்றினால் அது பெரிதும் போற்றப்படுகிறது. அதுவே ஒரு பெண், அழகு குறித்த அவர்களின் வரையறையை மீறி அசாதாரணமாக முடி மற்றும் தோற்றத்தை மாற்றிக்கொண்டால், அவரை விமர்சிக்க அவர்களுக்கு அனைத்து உரிமையும் உண்டு என நினைத்துக் கொள்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.