தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மாநிலங்களவை உறுப்பினர் (Rajya Sabha Seat) பதவிக்கான தேர்தலில், தற்போது ஒரு மிக முக்கியமான அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த ஜூன் மாதம் 18-ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில், ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தவெக கட்சியின் தலைமை நிலையச் செயலகம் சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் அவர்களின் ஒப்புதலுடன் இதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை இன்று முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் கடந்த சில தினங்களாக முதல்வர் விஜய்யை அடுத்தடுத்து நேரில் சந்தித்து ஆதரவு கோரி வந்த நிலையில், தற்போது தவெக தரப்பில் இருந்து இந்த ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு அதிரடியாக உறுதி செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.
