தமிழகத்தில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த காவலர் ஒருவருக்கு, அந்த மாணவி செருப்பால் அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருந்து புறப்பட்ட அரசுப் பேருந்தில் பயணம் செய்த அந்த மாணவியிடம், மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் ஒரு காவலர் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டுள்ளார்.

தொடக்கத்தில் பொறுமை காத்த மாணவி, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து தனது செருப்பை எடுத்து அந்த காவலரை அங்கேயே வெளுத்து வாங்கினார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற பயணிகள், பேருந்தை நிறுத்தச் சொல்லி அந்த காமவெறி பிடித்த காவலருக்குப் பொது இடத்திலேயே தர்ம அடி கொடுத்தனர்.

புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார், அந்த காவலரை அதிரடியாகக் கைது செய்தனர். பாதுகாப்பிற்கு இருக்க வேண்டிய காவலரே இத்தகைய அசிங்கமான செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், அஞ்சாமல் எதிர்த்து நின்ற அந்த மாணவிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகிறது.