இன்றைய காலகட்டத்தில் கிரெடிட் கார்டு இல்லாதவர்களே கிடையாது என்ற அளவிற்கு அனைவருடைய கையிலும் கிரெடிட் கார்டு வந்துவிட்டது. அன்றாட செலவுகளை பூர்த்தி செய்வதற்கும், ஷாப்பிங் செய்வதற்கும் முக்கியமான ஒன்றாக கிரெடிட் கார்டு மாறிவிட்டது. ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் நமக்கு விருப்பமான பொருட்களை வாங்குவதற்கு கிரெடிட் கார்டு முக்கிய பங்களிப்பை கொடுக்கின்றன.

இந்நிலையில் உங்கள் கிரெடிட் கார்டு கட்டணத்தை சரியான நேரத்தில் செலுத்தவில்லையா? அதனால், நீங்கள் மன அழுத்தம் அடைய வேண்டாம். ரிசர்வ் வங்கியின் சமீபத்தில் திருத்தப்பட்ட விதிகளின்படி, கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதியிலிருந்து 3 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்தினால் வங்கிகள் அபராதம் விதிக்காது. மேலும் CIBIL ஸ்கோரும் குறையாது. 3 நாட்களுக்குப் பிறகும் கட்டணம் செலுத்தவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.