இன்று தேர்வு முடிவுகள் வெளியாவதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தி உண்மையல்ல என CBSE தகவல் தெரிவித்துள்ளது. CBSE 10, +2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வினை ஏறத்தாழ 38.7 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில்,தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் விரைவில் அறிவிக்கப்படுமென அக்கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் விரைவில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. சிபிஎஸ்இ வாரியத்தின் cbse.nic.in, cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களின் வாயிலாக மாணவர்கள் சிரமம் இன்றி தேர்தல் முடிவுகளை காணலாம் . மேலும் பள்ளி மாணவர்களுடைய கைபேசி எண்ணுக்கு எஸ்.எஸ். எம்.எஸ் வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது