இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு அதிர்ச்சி வீடியோ, பார்ப்போரை பயத்துடன் நிற்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் வீட்டு மாடியில் குரங்கு ஒன்று வருவதைப் பார்த்து, அதை விரட்ட இரும்புக் கம்பியை எடுத்துக்கொண்டு செல்கிறார். துரதிர்ஷ்டவசமாக, வீட்டருகே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்சார கம்பியில் அந்த இரும்புக் கம்பி தொட, உடனடியாக மின்சாரம் தாக்கி அவர் கீழே விழுந்துவிடுகிறார்.

சில நொடிகளில் வலியுடன் உதவிக்கு கூப்பிடும் அவரது சத்தம் கேட்டு, வீட்டில் இருந்த பெண்கள் பதறி ஓடிவந்து, அவரை மீட்டனர். இந்த எதிர்பாராத விபத்து நொடிகளில் நடந்து பார்க்கும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ வைரலாகி, வீடுகளருகே மின்சார வயர்கள் செல்லும் இடங்களில், உலோகப் பொருட்களைப் பயன்படுத்தும்போது மிகுந்த கவனம் தேவை என்பதை வலியுறுத்துகிறது.

குரங்கு விரட்டுவது போன்ற சிறிய விஷயங்களில் கூட உயிருக்கு ஆபத்து வரலாம் என்பதால், எப்போதும் பாதுகாப்பை முதலில் நினைவில் கொள்ள வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, மின்சார நிறுவனங்கள் வயர்களை பாதுகாப்பாக அமைக்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அனைவரும் இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு எச்சரிக்கையாக இருப்போம்.