தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா தொடர்பான சர்ச்சைகள் கடந்த சில நாட்களாக தமிழக அரசியலிலும், சினிமா வட்டாரத்திலும் பெரும் புயலைக் கிளப்பி வருகின்றன.
குறிப்பாக, விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ளதாகக் கூறப்படும் சூழலில், இருவரும் ஒரு திருமண நிகழ்வில் ஒன்றாகக் கலந்துகொண்டது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில், இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரிடம் நெறியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர் பதிலளிக்கையில், “இது எல்லாருடைய வீட்டிலும் நடக்கக்கூடிய ஒரு சாதாரண செயல்தான்; இதை நாங்கள் ஒரு பெரிய விஷயமாகப் பார்க்கவில்லை” என்று மிகச் சாதாரணமாகக் கூறி கடந்து சென்றார்.
கள்ள காதல நாங்க positive பாக்குறோம்..
– தவெக மகளிர் அணி pic.twitter.com/xxlThNvJMN— தனி ஒருவன் 🔥🔥🙋🏻♀️⚔️ (@Thaniorvann) March 7, 2026
“>
மகளிர் அணியினரின் இந்தப் பதில் தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பையும், குடும்ப விழுமியங்களையும் முன்னிறுத்தும் ஒரு கட்சியின் மகளிர் அணியினரே, இத்தகைய சர்ச்சைக்குரிய விவகாரத்தை “சாதாரண விஷயம்” என்று கூறியிருப்பது நெட்டிசன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“பெண்கள் உரிமையைப் பேசும் மகளிர் அணியினர், இத்தகைய செயல்களை ஆதரிக்கிறார்களா?” என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. விஜய்யின் அரசியல் வருகையை விமர்சிப்பவர்கள், இந்தப் பேட்டியை முன்வைத்து த.வெ.க-வின் கொள்கைகள் குறித்து கடுமையான விமர்சனங்களைப் பதிவிட்டு வருவதால், இந்த விவகாரம் தற்போது புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.
