கர்நாடக மாநிலம் துமகூரு அருகே புறநகர் போலீஸ் எல்லைக் உட்பட்ட பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவருடைய மனைவி மாதவி. இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதே கிராமத்தில் தேவராஜ் பெட்டிக்கடை நடத்திவரும் நிலையில் மாதவிக்கு அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்த் குமார் என்பவர் உடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்த நிலையில் இது பற்றி தேவராஜுக்கு தெரிய வர மனைவியை கண்டித்துள்ளார்.

ஆனால் அவர் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. மாறாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனந்த் குமாருடன் மாதவி வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால் தேவராஜ் மனவேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டில் வைத்து விஷத்தை குடித்துவிட்டு தேவராஜ் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடத்திய விசாரணையில் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்தது.

அந்த கடிதத்தில் தேவராஜ், 17 ஆண்டுகளுக்கு முன்பு மாதவியை காதலித்து திருமணம் செய்தேன், கள்ளக்காதலுடன் ஓடி விட்டதால் என்னுடைய மரியாதை கெட்டு விட்டது, எனது தற்கொலைக்கு மனைவி மாதவி மற்றும் ஆனந்த் குமார் தான் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதி வைத்திருந்தார். இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.