தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக உலவும் குற்றங்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரி கலந்து கொண்டு பேசினார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மகளிர் ஆணைய தலைவர் குமாரி, கல்லூரி மாணவிகள் DP இல் புகைப்படங்களை வைக்க வேண்டாம். புகைப்படங்களை எடுத்து மார்பிங் செய்கிறார்கள். டெக்னாலஜியில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ அதே அளவு தீமைகளையும் கொண்டுள்ளது. அதனை எப்படி கையாள வேண்டும் என்பதை மிகவும் முக்கியம் என்று பெண்களுக்கு அறிவுரை கூறினார்.