நடிகை மஞ்சிமா மோகன் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். அதன் பிறகு பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2022 வருடம் நடிகர் கவுதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், தன்னுடைய திருமணம் குறித்து பரவிய தவறான தகவல்கள் குறித்து பேசி இருக்கிறார். அதில் என்னுடைய திருமணம் தொடர்பான தவறான தகவல்கள் சமூக வலைதளத்தில் வெளியானது.
திருமணத்திற்கு முன்பாக நான் கர்ப்பமாக இருந்ததாகவும் திருமணத்தில் என் மாமனாருக்கு விருப்பம் இல்லை என்றும் பல வதந்திகள் பரவி வந்தது. எல்லாம் ஜோடிக்கப்பட்ட பொய்கள் . நான் கௌதமருக்கு ஏற்ற ஜோடி இல்லை என்ற கமெண்டை பார்க்கும் பொழுது வலிக்கும். சமூக வலைதளங்களில் தம்பதிகள் தங்களுடைய திருமண புகைப்படத்தை பதிவிடுவதை பார்த்து எனக்கு பதிவிட வேண்டும் என்று தோன்றும். எங்களுடைய திருமண அறிவிப்பு வெளியான பிறகு எல்லாமே சோசியல் மீடியாவாகிவிட்டது. நான் இப்பொழுது பேசும் பொழுது மிகவும் கவனமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
