தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் பொதுக்கூட்ட விழா மதுரையில் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகும். கலைஞர் ஒரு சிறந்த அரசியல்வாதி. அவரிடம் பாடம் கற்றவர் ஸ்டாலின். இதனால் அவரும் சிறந்த அரசியல்வாதியாக இருப்பார்  நல்ல ஆட்சியை கொடுப்பார் என்று நம்பினோம். ஆனால் மிக கேவலமான நிலைக்கு சட்டம் ஒழுங்கு சென்று விட்டது.

ஒரு மருத்துவக் கல்லூரியாவது திமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளதா.? திமுக கொண்டு வந்த ஏதாவது ஒரு திட்டத்தை மத்திய அரசு பாராட்டியுள்ளதா. என்று கூறினார். மேலும் தமிழ்நாட்டில் கொலை கொள்ளை கற்பழிப்பு மற்றும் போதைப்பொருள் கலாச்சாரம் உள்ளிட்ட குற்றங்கள் பெருகி வருவதாகவும் சட்டம் ஒழுங்கு திமுக ஆட்சியில் முற்றிலும் சீர் கெட்டுவிட்டதாகவும் அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில் கலைஞர் ஒரு சிறந்த அரசியல்வாதியாக இருந்த நிலையில் அவருடைய மகன் ஸ்டாலின் சிறந்த அரசியல்வாதியாக இல்லை என தற்போது செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.