உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சிவம். இவரது மனைவி சுமானா. இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். பெங்களூரில் இருக்கும் வாடகை வீட்டில் சிவம் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தார். சிவம் பெயிண்டராக வேலை பார்க்கிறார். தற்போது சுமானா மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சிவம் தனது மனைவியை அடித்துள்ளார். அதன் பிறகு இருவரும் வெவ்வேறு அறையில் தூங்கியுள்ளனர்.;காலை சுமானாவை எழுப்ப முயன்ற போது அவர் எழவில்லை.
இதனால் உணவு தயாரித்து சாப்பிட்டுவிட்டு வேலைக்கு சென்ற சிவம் இரவு மீண்டும் வீட்டிற்கு வந்து மது குடித்துவிட்டு தனது மனைவியை எழுப்ப முயன்றார். அதன் பிறகும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் மனைவி இறந்ததை அறிந்த சிவம் அச்சத்தில் அங்கிருந்து தப்பி சென்றார்.
இதனை தொடர்ந்து வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிவமை கைது செய்து விசாரணை நடத்திய போது மனைவி இறந்தது தெரியாமலேயே இரண்டு நாட்கள் இயல்பாக வீட்டில் இருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
