கர்நாடகா மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்ற வருகிறது. கர்நாடக மாநில சட்டசபையின் பதவிக்காலம் வருகின்ற மே மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. மொத்தம் 224 இடங்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக வருகின்ற மே 10ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி என்ன பட்டு அன்று மாலை அங்கு ஆட்சி அமைக்க போவது யார் என அறிவிக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் இன்று முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட உள்ளது. இந்த தேர்தலில் புதிய முகங்களை களம் இறக்க கட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி இதுவரை 166 தொகுதிகளுக்கு இரண்டு கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.