சிறந்த திட்டங்களில் ஒன்றாகிய சுகன்யா சம்ரித்தி யோஜனா(SSY), தங்கள் மகளின் எதிர்கால நிதிப் பாதுகாப்புக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.250 வரை பங்களிக்க உங்களை அனுமதிக்கிறது. சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்குகளை முதலீட்டாளர்கள் 25 அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் இந்திய தபால் நிலையங்களில் துவங்கலாம். கணக்கை திறப்பதற்கு ஒரு சில ஆவணங்கள் மட்டும் தேவைப்படும். குறைந்தபட்ச வைப்பு தொகையான ரூ.250-ல் இந்த கணக்கைத் துவங்கலாம்.

சுகன்யா சம்ரித்தி யோஜனாவுக்கு தேவையான ஆவணங்கள் கணக்கு தொடங்கும் படிவம், பயனாளியின் பிறப்புச் சான்றிதழ் (மருத்துவமனை, அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட குடியிருப்பு (அ) குழந்தையின் பள்ளி முதல்வரிடமிருந்து பெறலாம்), பாதுகாவலர் (அ) பெற்றோருக்கான சரியான முகவரி சான்று மற்றும் பாதுகாவலர் (அ) பெற்றோருக்கான அடையாளச்சான்று இருந்தால் போதும்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா முதிர்வுகாலம் கணக்கு தொடங்கும் நாளிலிருந்து 21 வருட முதிர்வு காலத்தை கொண்டிருக்கிறது. இதற்கான வட்டி கால்குலேட்டர் ஒவ்வொரு நிதி ஆண்டின் முடிவிலும் வட்டி கணக்கில் வரவு வைக்கப்படும். SSY கால்குலேட்டர் 7.6% சராசரி விகிதத்தில் 15 வருடங்களுக்கு ரூ.1.5 லட்சம் வருடாந்திர வைப்புத் தொகையுடன் 21 ஆண்டுகளுக்கு பின் ரூ.65,93,071 முதிர்வு மதிப்பை எட்டும் என மதிப்பிடுகிறது. 15 வருடங்களுக்கு வைப்புத் தொகை ரூ.43,43,071 ஆகவும், முதலீடுகளுக்கான வட்டி ரூ.22,50,000 ஆகவும் இருக்கும்.