கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 20-ம் தேதியோடு முடிவடைந்தது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தம் 5,102 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு இருந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது

இந்நிலையில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் காங்கிரசில் இணைந்ததால், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பாஜக காங். இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், தற்போது காங்.க்கு சாதகமாக மாறியுள்ளது. சி-வோட்டர் சமீபத்தில் நடத்திய கருத்துக்கணிப்பில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்., 106-116 (பெரும்பான்மை), பாஜக-79-89, ஜேடிஎஸ் 24-34, சுயேட்சை 5 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.