தமிழ்நாட்டில் நேற்று பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு விழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நேற்று தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.
இதே போன்று புதுச்சேரியிலும் 40 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழையால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் சூழ்ந்து மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கனமழை மற்றும் புயல் எதிரொலியாக நேற்று தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று தமிழகத்தில் 500 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. அதன்படி இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இந்த மருத்துவ முகாமின் போது ORS கரைசல், நிலவேம்பு குடிநீர், காய்ச்சல், சளி மற்றும் செத்துப்போனாகிய மருந்துகளை அளவுக்கு அதிகமாக கையிருப்பு வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற இருப்பதால் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
