தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இனி வரும் நாட்களில் எவ்வித தாமதமும் இன்றி காலை 10 மணிக்குள் தங்களது பணிக்கு வர வேண்டும் என்று துறை வாரியாக அதிரடி வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளை வேகப்படுத்தவும், மக்கள் தேடி வரும் கோப்புகளுக்குத் தாமதமின்றி தீர்வு காணவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசுத் துறை அலுவலகங்களிலும் உள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் எக்காரணத்தைக் கொண்டும் காலதாமதம் செய்யாமல், குறிப்பிட்ட நேரத்திற்குள் அலுவலகத்திற்கு வந்து தங்களது பணிகளைத் தொடங்க வேண்டும் என அந்தந்த துறைத் தலைவர்கள் மூலம் இந்த உத்தரவு ஊழியர்களுக்குத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலையிலேயே அலுவலகங்கள் சுறுசுறுப்பாக இயங்குவதை உறுதி செய்ய எடுக்கப்பட்டுள்ள இந்த திடீர் கெடுபிடி, அரசு ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
