கரூர் கூட்ட நெரிசல் பேரிழப்பு தொடர்பான வழக்கில் நீதிபதி கடுமையான கேள்விகளை எழுப்பினார். “முதல்வர் அல்லது எடப்பாடி பழனிசாமி போன்ற அரசியல்வாதிகள் வரும்போது அவர்களது கட்சியினர் மட்டுமே அதிகமாக வருவார்கள்;

ஆனால் டாப் ஸ்டாரான விஜய் வருவார் என்றால் குடும்பத்துடன் பெண்களும், குழந்தைகளும் அதிக அளவில் வருவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இத்தகைய சூழலில் கூட 10,000 பேர் தான் வருவார்கள் எனக் கணித்ததே பெரிய தவறு” என நீதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், “கூட்டம் அளவுக்கு மீறி சென்றதும் தெரிந்தும், ஏன் உடனடியாக பரப்புரையை நிறுத்தவில்லை? பெண்கள், குழந்தைகள் பங்கேற்கும் சூழலில் கூட, பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சரியாக மேற்கொள்ளாதது மிகப் பெரிய அலட்சியம்” என நீதிபதி கூறினார்.

இந்தக் கேள்விகள், கரூர் துயரச் சம்பவத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏற்பாட்டாளர்களின் பொறுப்பின்மையை நேரடியாக சுட்டிக்காட்டுவதாக நீதிமன்ற வளாகத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.