கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 2019 ஆம் ஆண்டு மனோஜ் என்ற நபர் தன்னிடம் டியூசன் பயின்ற 11ஆம் வகுப்பு மாணவியை ஸ்பெஷல் கிளாஸ் என்று வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி மனோஜின் செயலுக்கு கருணை காட்டக்கூடாது என்று குறிப்பிட்ட நீதிபதி ரேகா அவர்கள் 111 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அதோடு ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் அபராத விதித்தும் அதைக் கட்ட தவறினால் கூடுதல் காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.