இன்டர்நெட்டில் சமீபத்தில் ஒரு கியூட்டான வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒரு நபர் கயிற்றைச் சுற்ற, ஒரு குட்டி கரடிக் குட்டி  அதைத் தாண்டி குதித்துக் குதித்து ‘ஸ்கிப்பிங்’ (Skipping) பயிற்சி செய்கிறது.

பலமுறை முயன்றும் சரியான நேரத்தில் கயிற்றைத் தாண்ட முடியாமல் அந்தக் குட்டித் தனியன் தடுமாறுகிறது. எனினும், சற்றும் மனம் தளராமல், நம்பிக்கை குறையாமல் தொடர்ந்து குதித்து முயற்சிக்கும் அதன் உத்வேகமும், சிறிய சிறிய முயற்சிகளும் பார்ப்பவர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன.
<a href=”http://

“>
இதன் காரணமாகவே இந்தக் காணொலி சமூக வலைதளமான ‘எக்ஸ்’ (X) தளத்தில் @sciencegirl என்ற கணக்கின் மூலம் பகிரப்பட்டு, லட்சக்கணக்கான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் பெற்று, இணையத்தின் மனதைக் கொள்ளைகொண்டுள்ளது.

விலங்குகளும் அறிவும், அன்பும் நிறைந்தவை என்பதை இந்தக் காணொலி தெளிவாகப் புரியவைப்பதாக நெட்டிசன்கள் பலரும் கமென்ட் செய்து வருகின்றனர்.