இந்தியா முழுவதும் உள்ள பிரபல சுற்றுலா தலங்கள் மற்றும் கோவில் உள்ளிட்ட புனித தலங்களுக்கு IRCTC சுற்றுலா அழைத்து செல்கிறது. பாதுகாப்பான பயணம் மற்றும் சிறப்பான அனுபவமாக இருக்கவேண்டும் என நினைப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். கம்மியான விலையில் அனைத்து வசதிகளுடன் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். IRCTC அறிவித்துள்ள தக்ஷிண பாரத சுப் யாத்ராவின் கீழ் ராமேஸ்வரம், மதுரை, திருப்பதி, ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனா போன்ற இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் அழைத்துச்செல்லப்படுவார்கள்.

இந்த சுற்றுலா 7 இரவுகள் மற்றும் 8 பகல்களுக்கான திட்டமாக வகுக்கப்பட்டு இருப்பதாக IRCTC தெரிவித்து உள்ளது. இந்த ரயிலில் மொத்தம் 720 ஸ்லீப்பர் இருக்கைகள் இருக்கிறது. இதன் பேக்கேஜின் விலையானது ஒருவருக்கு ரூ.15,500 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதோடு காலை தேநீர், காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்படும். சைவ உணவுகள் மட்டும் உணவுப் பட்டியலில் இருக்கும் என்று ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. ஒரு வேளை போகும் இடத்தில் நுழைவுக்கட்டணம், படகு சவாரி, சாகச விளையாட்டு இருந்தால் அதற்குரிய செலவுகளை பயணிகளே ஏற்கவேண்டும்.