இப்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 100 வருடங்கள் பழமையானது மற்றும் இடநெருக்கடியாக இருக்கிறது. ஆகவே புது நாடாளுமன்ற கட்டிடம் காட்டுவதற்கு மத்திய அரசானது முடிவு செய்தது. சென்டிரல் விஸ்டா மறு சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புது நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையிலிருந்து இந்தியா கேட் வரை 3 கி.மீ. சாலையை மறு சீரமைத்தல், பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கு புதிய இல்லம், அலுவலகம், துணை ஜனாதிபதிக்கு புது இல்லம் போன்றவை கட்டுவதும் “சென்டிரல் விஸ்டா” மறுசீரமைப்பு திட்டத்தில் அடங்கும்.

புது நாடாளுமன்ற கட்டுமான பணிக்கு சென்ற 2020-ம் வருடம் டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கடந்த வருடம் நவம்பர் மாதத்திற்குள் கட்டுமான பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் அந்த இலக்கை தாண்டி விட்டது. இதனிடையே கட்டிடத்துக்கு இறுதி வடிவம் அளிக்கும் பணிகளானது நடைபெற்று வருகிறது. இருப்பினும்  திறப்புவிழா தேதி பற்றி மத்திய அரசு அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த மாத இறுதிக்குள் கட்டிடம் தயாராகிவிடும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தது.