கம்போடியா நாட்டில் சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று ஆளும் கட்சி 96 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. இதனால் ஆசிய நாடுகளிலேயே நீண்ட காலம் பிரதமராக இருந்த ஹூன் சென் தனது  எழுபதாவது வயதில் மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் ஹூன் சென் திடீரென தான் பதவி விலக இருப்பதாகவும் 3 வாரங்களில் அனைத்து பொறுப்புகளையும் தனது மகன் ஹூன் மனேட்டிடம் ஒப்படைப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஹூன் மனேட் தற்போது வரை பாதுகாப்புத்துறை இலாகாவை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.