ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்தினரும் துணை ராணுவத்தினரும் தொடர்ந்து மோதலில்  ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு ஏற்படும் கலவரத்தில் இதுவரை 500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் அந்நாட்டின் ஓம்தூர்மன் நகரில் உள்ள ராணுவ தளத்தின் மீது துணை ராணுவத்தினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஆனால் அந்த ஏவுகணை திசை மாறி அருகில் இருந்த மார்க்கெட் பகுதியில் விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் 16 அப்பாவி மக்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை எடுத்து வருகின்றனர். இத்தகைய செயலுக்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்துள்ளது.