கன்னி ராசி அன்பர்களே,

உங்களைப் பற்றி தவறான எண்ணம் கொண்டவர்கள் இப்போது அதனை மாற்றி அமைத்துக் கொள்வார்கள். நல்ல நண்பர்கள் சேர்க்கை ஏற்படும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். யாரிடமும் கோபப்பட வேண்டாம். நன்மைகள் நடக்கும் நாள். கூடுதல் பணிகளால் இன்று உடல் சோர்வு ஏற்படும். தொழில் வியாபார நடைமுறை சீராக இருக்கும். பொருட்களை இரவல் கொடுக்கல் வாங்கல் வேண்டாம். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

எதிர்பார்க்கும் லாபங்களை பெற கடுமையாக உழைப்பீர்கள். தொழிலாளர்கள் வீண் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும். பயணத்தால் அலைச்சல் ஏற்படும். மதிநுட்பத்தால் வெற்றி பெறுவீர்கள். நேர்மறையான எண்ணங்கள் வந்து செல்லும். இன்று பொறுப்புடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்திற்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள். திட்டம் போட்டு செய்யும் காரியத்தில் வெற்றி காண்பீர்கள். பெண்கள் இன்று ஆழ்ந்த சிந்தனையில் காணப்படுவீர்கள்.

முன்கோபம் அவ்வப்போது வரும். தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்பாக காணப்படுவீர்கள். வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் கல்வியில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பெரியவர்களுக்கு  மரியாதை கொடுக்க வேண்டும். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்