சிம்ம ராசி அன்பர்களே,

இன்று எதிர்பாராத வகையில் நன்மைகள் நடக்கக்கூடும். புதிய திட்டங்கள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேறும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்தி செல்வீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றும் சூழல் உள்ளது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான நல்ல பலனை அடைய முடியும்.

சம்பள உயர்வு பதவி உயர்வு போன்ற நல்ல விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும். பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்கும் சூழல் உருவாகலாம். எது சரி எது தவறு என்று திட்டமிட்டு செயல்படுங்கள். தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்கள் உங்கள் மனதை நன்றாக புரிந்து கொள்ளும் சூழல் உள்ளது. இன்று மாணவர்கள் எதையும் சிந்திக்காமல் இறங்க வேண்டாம்.

கல்விக்கான செலவுகள் ஒரு பக்கம் இருக்கிறது. பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பெண்கள் ஓய்வாக இருக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளிடம் கோபம் வேண்டாம். சிறு பிள்ளைகளை தட்டிக்கொடுத்து வேலை வாங்க பாருங்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: ஐந்து மற்றும் ஆறு

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்