
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலுக்கு மாதம் தோறும் பௌர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நாளையும், நாளை மறுநாளும் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சாஸ்தா கோவில், அய்யனார் கோவில், செண்பகத்தோப்பு மற்றும் ராக்காச்சி அம்மன் கோவில் பகுதிகளுக்கு செல்ல அனுமதி கிடையாது என வனத்துறை அறிவித்துள்ளது.