கன்னியாகுமரிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, வரும் நவம்பர் 25-ஆம் தேதி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று (நவ. 24) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதுடன், இம்மாவட்டங்களில் நாளை (நவ. 25) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தெரிவிக்க நெல்லை மாவட்ட நிர்வாகம் 0462-2501070 மற்றும் 9786566111 ஆகிய அவசர உதவி எண்களையும் அறிவித்துள்ளது.
