“ஈ எறும்புக்கும் தீங்கிழைக்கக் கூடாது” என்ற பழமொழிக்கேற்ப, தனது வயலில் இருந்த பறவைக் கூட்டையும், அதிலிருந்த முட்டைகளையும் காக்க, அந்தப் பகுதியில் கரும்பு அறுவடையையே விவசாயி ஒருவர் நிறுத்தியுள்ள சம்பவம் இணையவாசிகளைக் நெகிழச் செய்துள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு கரும்புத் தோட்டத்தில் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடப்பது தெரிகிறது. தொழிலாளர்கள் கரும்புகளை வெட்டிக் கொண்டிருக்கும்போது, ஒரு சிறிய பறவை அந்த இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்து மிகுந்த பதற்றத்துடன் ஒலியெழுப்பிக் கொண்டே இருக்கிறது.
View this post on Instagram
7பறவையின் சத்தத்தைக் கேட்ட அந்த விவசாயி, ஏதோ ஒரு ஆபத்தை உணர்ந்து தேடிப் பார்த்துள்ளார். அப்போது, அறுவடை செய்யப்பட வேண்டிய ஒரு கரும்புப் போரின் (கட்டுக் கரும்பு) உள்ளே சிறிய பறவைக் கூடு இருப்பதையும், அதில் நீல நிறத்தில் சிறிய முட்டைகள் இருப்பதையும் அவர் கண்டார். தன் தாய்மைப் பாசத்தால் அந்தப் பறவை கதறுவதை உணர்ந்த விவசாயி, உடனடியாக அந்தப் பகுதியில் கரும்புகளை வெட்ட வேண்டாம் எனத் தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டார்.
சுமார் 6.7 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்துள்ள இந்த வீடியோ, இன்ஸ்டாகிராமில் (@official_ankur04) பகிரப்பட்டுள்ளது. “ஒரு வாயில்லா ஜீவனின் வீட்டைக் காக்கத் தனது லாபத்தைப் பார்க்காமல் கரும்புகளை அப்படியே விட்டுவிட்டீர்களே, நீங்கள் ஒரு சிறந்த மனிதர்” என 6 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். மேலும் இயற்கையோடு இணைந்து வாழும் விவசாயிகளின் பரந்த உள்ளத்திற்குச் சான்றாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
