நடப்பு டி20 உலகக்கோப்பையில் மூன்று முறை டக்-அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றியுள்ள இந்தியத் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவுக்கு ஆதரவாகவும், சில நுணுக்கமான அறிவுரைகளையும் ஃபாப் டு பிளெசிஸ் பகிர்ந்துள்ளார்.
அபிஷேக் சர்மாவின் ஆட்டத்தை உலக நாடுகளின் ‘அனலிஸ்ட்கள்’ தற்போது மிகத் துல்லியமாகப் புரிந்துகொண்டுவிட்டனர் என்று கூறிய டு பிளெசிஸ், “அபிஷேக் ஆஃப்-சைடில் சிறப்பாக ஆடுவதால், எதிரணிகள் இப்போது அங்கு எல்லைக்கோட்டில் ஃபீல்டர்களை நிறுத்தி அவரைச் சிக்க வைக்கின்றனர்.
அவர் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸருக்குத் தூக்க முயலாமல், ஃபீல்டிங் வியூகத்தைப் பார்த்து தரையோடு தரையாக ஆடி சிங்கிள் ரன்களை எடுக்கப் பழக வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஸ்லோயர் பந்துகளில் அவர் தடுமாறுவதைச் சுட்டிக்காட்டிய டு பிளெசிஸ், வெளியே கேட்கும் விமர்சனங்களைக் காதில் வாங்காமல் அமைதியாகத் தனது பலத்தில் கவனம் செலுத்தினால், இந்த உலகக்கோப்பையிலேயே அபிஷேக் ஒரு மறக்க முடியாத இன்னிங்ஸை ஆடுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
