தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம், சின்ன சங்கரம்பேட்டை மண்டலம், காஜாபூரைச் சேர்ந்தவர் பிரவீன் கவுடு. கூலித்தொழிலாளியான இவருக்கும், அகிலா என்பவருக்கும் திருமணமாகி 2 வயதில் ஒரு குழந்தை இருந்தது. இந்நிலையில், பிரவீன் கவுடு உடல்நலக் குறைவால் கடந்த ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்தார். கணவரை இழந்த சோகத்தில் இருந்த அகிலா, தனது குழந்தையுடன் மாமியார் வீட்டிலேயே தங்கியிருந்து வந்தார்.
கணவரின் மறைவால் சோகத்தில் இருந்த அகிலாவை, அவரது மாமியார் மறுமணம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால், அகிலா அதற்கு விருப்பம் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார். இந்தச் சூழ்நிலையில், நேற்று முன்தினம் அகிலா தனது 2 வயது குழந்தையைத் தூக்கில் தொங்கவிட்டு கொன்றதுடன், தானும் அதே இடத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரட்டைக் கொலை மற்றும் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
