ஆந்திர மாநிலத்தின் கோணசீமா மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் புஷ்பா, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது உறவினரை திருமணம் செய்து கொண்டிருந்தார். ஆனால் திருமணமான சில மாதங்களில் கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இருவரும் பிரிந்தனர். அதன் பின்னர் புஷ்பா விஜயவாடா நகரம் சென்றார்.
விஜயவாடாவில் கார் ஏசி மெக்கானிக்காக பணியாற்றும் ஷேக் ஷாம் என்பவருடன் புஷ்பாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியது. இருவரும் பி.சவரம் பகுதியில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து, கணவன்-மனைவியாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். சில நாட்களில் ஷாம் மதுவுக்கு அடிமையாகி, பணத்தேவையால் புஷ்பாவிடம் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்தார்.
முக்கியமான திருப்பமாக, கடந்த இரவு 9 மணியளவில், ஷாம் குடிபோதையில் வீட்டிற்கு வந்து, பணத்தேவையை காரணமாகக் கூறி புஷ்பாவை விபசாரத்தில் ஈடுபடுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு புஷ்பா கடுமையாக எதிர்த்ததும், திடீரென அவர் வைத்திருந்த கத்தியால் புஷ்பாவை சரமாரியாக குத்தி கொன்றுள்ளார்.
உடனே ஷாம் தப்பி ஓடிய நிலையில், போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று புஷ்பாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது ஷேக் ஷாமை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காதலனிடம் விபசாரம் செய்ய மறுத்ததால் உயிரிழந்த இளம்பெண் சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
