மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் கணவனின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. 2011-ஆம் ஆண்டு பொறியாளரைத் திருமணம் செய்த அந்த வங்கி ஊழியர், கருத்து வேறுபாடு காரணமாகத் தனது தாயார் வீட்டிற்குச் சென்றார். அந்த நேரத்தில், கணவன் போலி ஆவணங்களைத் தயாரித்து 2019-லேயே விவாகரத்து பெற்றார்.

ஆனால், இந்த விவகாரத்தைத் தனது மனைவியிடம் மறைத்துவிட்டு, அவரிடம் தொடர்ந்து பழகி வந்ததோடு, பல ஆண்டுகளாகப் பலமுறை உடலுறவு வைத்துள்ளார். விவாகரத்து ஆனதை அறியாத அந்தப் பெண், தனது கணவருடன் தொடர்ந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். சமீபத்தில் அந்தப் பெண் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியபோதுதான், தனக்கு ஏற்கனவே ஏழு ஆண்டுகளுக்கு முன்பே விவாகரத்து அளிக்கப்பட்டது என்ற உண்மை தெரியவந்தது.

மேலும் கணவனின் இந்த ஏமாற்று வேலை மற்றும் தன்னைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் சித்திரவதை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விவாகரத்து பெற்ற பின்னரும் மனைவியை ஏமாற்றி உறவு கொண்ட கணவனின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.