கணவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மீரட் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்கான், தற்போது பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து மீரட் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் குழு அவளை தொடர்ந்து பரிசோதித்து வருவதாகவும், எந்த நேரத்திலும் பிரசவம் நடைபெறக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சிறை நிர்வாகம் தெரிவித்ததாவது, முஸ்கானின் கர்ப்ப கால பரிசோதனைகள் அனைத்தும் சிறையில் நடைபெற்றுள்ளன. மகப்பேறு மருத்துவர் பரிந்துரைத்த உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. எந்த வகையான வேலைகளும் செய்ய அவள் கட்டாயப்படுத்தப்படவில்லை என்றும் கூறப்பட்டது.
கணவரைக் கொலை செய்து உடலை டிரம்மில் மறைத்த அதிர்ச்சி சம்பவம் முஸ்கன், தனது காதலன் சாஹிலுடன் சேர்ந்து தனது கணவர் சௌரவ்வை கொலை செய்தார். கொலைக்குப் பிறகு, சௌரவ்வின் உடலை துண்டுதுண்டாக வெட்டி, நீல நிற பெரிய டிரம்மில் வைத்துள்ளனர். பின்னர் சிமென்ட் கலவையால் டிரம்மை மூடி மறைத்துள்ளனர்.
இந்த கொலைக்கு பின், முஸ்கானும் சாஹில்லும் இமாச்சலப் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் அங்கு நடனமாடும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதும், சந்தேகங்கள் மேலும் தீவிரமானது.
சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, மீரட் போலீசார் இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டபோது முஸ்கன் கர்ப்பமாக இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.
இப்போது முஸ்கன் பெற்றெடுக்க உள்ள குழந்தையின் தந்தை யார் என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. சௌரவ்வின் குடும்பத்தினர், “குழந்தை சௌரவ்வின் குழந்தையாக இருந்தால் தத்தெடுக்க தயாராக உள்ளோம்” என தெரிவித்துள்ளனர்.
இதனால், குழந்தை பிறந்த பிறகு, தந்தை குறித்து உறுதிசெய்ய டிஎன்ஏ சோதனை செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தற்போது முஸ்கன் மீரட் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். எந்த நேரத்திலும் பிரசவம் நடைபெறக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
