உலக அளவில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை நாயகனாகத் திகழும் 71 வயது சீன நடிகர் ஜாக்கிசான், தான் உயிருடன் இருக்கும்போதே தனது மறைவுக்குப் பிறகு இசைக்க வேண்டிய இறுதிப் பயணப் பாடலை உருவாக்கியுள்ள விசித்திரமான மற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாவிலும் சினிமா வட்டாரத்திலும் மிகப்பெரிய புயலையும் விவாதத்தையுமே கிளப்பியுள்ளது.

சீன ஊடகங்களின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் அடுத்தடுத்த மறைவு ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தால், வாழ்க்கை மற்றும் இறப்பு குறித்த முக்கியச் செய்தியை உலகிற்குச் சொல்ல ஜாக்கிசான் இந்தத் தனித்துவமான ஃபேர்வெல் (Farewell) பாடலைத் தற்பொழுது பதிவு செய்துள்ளார்.

தான் உயிரிழந்த பிறகு மட்டுமே அந்தப் பாடலை வெளியில் வெளியிட வேண்டும் என்றும், தனது இறுதிச்சடங்கில் இந்தப் பாடல் கண்டிப்பாக ஒலிக்க வேண்டும் என்றும் அவர் மிகவும் திட்டவட்டமாக நிபந்தனை விதித்துள்ளார்.

முன்னதாக, புரூஸ் லீயின் படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் துணை நடிகராகவும்  தனது பயணத்தைத் தொடங்கி ஹாலிவுட் வரை கொடிகட்டிப் பறந்த ஜாக்கிசான், தான் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த ரூ. 4000 கோடி மதிப்பிலான ஒட்டுமொத்த சொத்துக்களையும் தனது மகன் ஜெய்சிசனுக்குக் கொடுக்காமல், ஏழை மக்களுக்கு உதவும் வகையில் தனது அறக்கட்டளைக்கு முழுமையாகத் தானமாக வழங்கப் போவதாக அறிவித்து ஏற்கனவே உலகையே அடியோடு அதிரவைத்திருந்தார்.

தற்பொழுது இந்த லேட்டஸ்ட் உருக்கமான செய்தி சமூக வலைத்தள பக்கங்களில் மிக வேகமாகப் பரவி, “சொத்துக்களைத் தானம் செஞ்சது மட்டுமில்லாம, தனக்கான மரணப் பாட்டையும் இப்பவே ரெடி பண்ணி வச்சிருக்காரே .. நிஜமாவே ஜாக்கிசான் ரியல் லைஃப்லயும் ஒரு  மாஸ் ஹீரோதான்!” என்று நெட்டிசன்கள் தங்களது நெகிழ்ச்சியான கமெண்ட்டுகளுடன் இந்த நியூஸைத் தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.